‘தரையில் உறங்கினேன்; தேங்காய் தண்ணீர் மட்டுமே அருந்தினேன்’ ராமர் கோயிலுக்கான அனுஷ்டானத்தை நினைவு கூரும் மோடி

By காமதேனு

அயோத்தி பால ராமர் கோயிலுக்கான தனது 11 நாள் அனுஷ்டானத்தை, தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார் பிரதமர் மோடி.

ஊடகங்களுக்கு தனிப்பட்ட வகையில் பேட்டி அளிப்பதை பெரிதும் விரும்பாத பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் ஏராளமான ஊடகப் பேட்டிகளை அளித்து வருகிறார். உள்நாடு - வெளிநாடு, அச்சு - காட்சி என பல வகை ஊடகங்களில் மோடியின் பேட்டிகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அவற்றில் ஆச்சரியமூட்டும் வகையில், எதிர்க்கட்சிகளின் மோடியை எரிச்சலூட்டும் கேள்விகளுக்கும் அநாயசமாக பதில் அளித்துள்ளார்.

பிரச்சாரத்துக்கான ரோடு ஷோ ஒன்றில் பிரதமர் மோடி

எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்கும் மத்திய விசாரணை அமைப்புகளின் கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகள், தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆகியவை உட்பட பல கேள்விகளை எதிர்கொண்டு விரிவான பதில்களை வழங்கி வருகிறார். அவற்றில் ஒன்றாக அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம், அதற்காக தனிப்பட்ட முறையில் தயாரானது உள்ளிட்டவற்றை மோடி சிலிர்ப்புடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த வகையில் ’ராமர் கோவில் பிரான் பிரதிஷ்தா விழா என்பது தனது ஆன்மீக பயணத்தில் ஒரு முக்கியமான தருணம்’ என்று மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் விழாவுக்கு முன்னதாக தான் கடைபிடித்த 11 நாள் அனுஷ்டானத்தையும் பிரதமர் மோடி இன்றைய பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். செய்தி ஏஜென்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மோடியின் ஆன்மிக அனுபவம் விரிவாக இடம்பெற்றுள்ளது.

“ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டபோது, ​​இவ்வளவு பெரிய பொறுப்பை எப்படி நிறைவேற்றுவது என்று வியந்தேன். பின்னர் ஒரு சில துறவிகள் மற்றும் ஞானிகளிடம் ஆலோசனை கேட்டேன் ... எனது ஆன்மீக வாழ்க்கையுடன் தொடர்புடையவர்களையும் அணுகினேன். இந்த வாய்ப்பை நான் ஒரு பிரதமராக அணுகாமல், ஒரு ராம பக்தனாக அணுகினேன்.

ராமர் கோயில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.

11 நாள் அனுஷ்டானத்தை முறையாக கடைபிடிப்பதற்காக தரையில் தூங்கினேன்; தேங்காய் நீர் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்தேன். ராமர் சென்ற அனைத்து இடங்களுக்கும் பயணித்தேன். 11 நாள் அனுஷ்டானம் என்பது எனது ஆன்மீக பயணத்திற்கு மிகவும் முக்கியமான காலகட்டமானது. ராமர் கோயில் விழா என்பவதை வெறும் நிகழ்வாக அல்லாது லட்சக்கணக்கான மக்கள் தியாகம் செய்த கனவை நனவாக்குவதாக கருதினேன்.

ராமர் கோயிலுக்கான 500 ஆண்டுகால போராட்டத்தையும், 140 கோடி மக்களின் நம்பிக்கையையும் உணர்ந்தேன். நாட்டின் ஏழை மக்கள் தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை, இந்த கனவை நனவாக்க கொடுத்துள்ளனர். ராமர் கோயில் அரசின் பணத்தில் கட்டப்படவில்லை; மாறாக பொதுமக்களின் பங்களிப்பால் கட்டப்பட்டது” என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE