மீண்டும் ஒரு வாய்ப்பு... ஹஜ் பயணம் செல்ல விரும்புபவர்கள் ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்!

By காமதேனு

2024ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதற்கான கால அவகாசத்தை ஜனவரி 15 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கும் முறை கடந்த 4ம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. விண்ணப்பிப்பது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜனவரி 15ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) "HAJ SUVIDHA" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம். ஹஜ் 2024-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE