சமயபுரம் மாரியம்மன் உண்டியல்களில் ரூ.74 லட்சம் காணிக்கை!

By காமதேனு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டன.

சமயபுரம் மாரியம்மன் கோயில்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள உண்டியல்கள், கோயில் நிர்வாகம் சார்பாக மாதம் 2 முறை திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் 2-வது முறையாக நேற்று கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்களை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில் 74 லட்சத்து 62 ஆயிரத்து 695 ரூபாய் ரொக்கம், இரண்டு கிலோ 515 கிராம் தங்கம், 3 கிலோ 990 கிராம் வெள்ளி, 150 அயல்நாட்டு நோட்டுகள், 936 அயல் நாட்டு நாணயங்களும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE