திருப்பதி, பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று கல்ப விருட்ச வாகன சேவை நடந்த நிலையில் இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருப்பதியில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட குடைகள் இன்று கருட சேவை வீதி உலாவில் பங்கேற்கின்றன.
இதனால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர். பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். மேலும் நேற்று மாலை முதல் இன்று இரவு வரை மலைப் பாதையில் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.