நாகூர் கந்தூரி விழாவுக்கு 45 கிலோ சந்தனக்கட்டை: அரசாணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

By காமதேனு

நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி விழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகூர் தர்கா நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நாகூர் ஆண்டவர் தர்கா

தமிழ்நாடு வக்பு வாரியம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆண்டுதோறும் வனத்துறை இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவுக்கு இலவசமாக மாநில அரசு வழங்கி வருகிறது. நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் எனப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்காவில் கந்தூரி விழா சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு வைபவத்தன்று பூசப்படும் சந்தனத்தை வழங்குமாறு நாகூர் தர்கா நிர்வாகம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது. அதனையேற்று வழங்குவதற்கான அரசாணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

நாகூர் ஆண்டவர் தர்கா

நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர்ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவு துவங்குகிறது!

அதிர்ச்சி... எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!

விஜய் முதல் குஷ்பு வரை.... திரையுலகில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்!

200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்

19 வயது இன்ஸ்டா பிரபலம் மரணம்... அறுவை சிகிச்சைக்கு பின்பு நேர்ந்த துயரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE