அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் தேக்கு மரத்திலான 44 பிரம்மாண்ட கதவுகளைச் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் 1600 சிற்பக் கலைஞர்கள் மூலம் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோயில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களைக் குடைந்து, 350-க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்படுகிறது.
அடுத்தாண்டு ஜனவரி 22-ம் தேதி இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலின் நுழைவாயில், முன் மண்டபம், பக்கவாட்டு மண்டபம், வெளியே வரும் வழி, ராமர், சீதை கருவறைகள், லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 சன்னதிகளின் வாசல்களுக்குத் தேவையான 44 தேக்கு மரக்கதவுகளைத் தயார் செய்யும் பணி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக வடிவமைத்து வருகின்றனர். அதில், இரண்டு யானைகள் துதிக்கையை தூக்கி வரவேற்பது போலவும், கழுகுகள் பறப்பது போலும் பல்வேறு வடிவமைப்புகளுடன் கதவுகள் வடிமைக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடிய தேக்கு மரங்களைக் கொண்டே இப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது, செய்து முடிக்கப்பட்ட மரக்கதவுகளை அயோத்தி ராமர் கோயிலில் மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், சக மரச்சிற்பக் கலைஞர்கள் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!
ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு...விசாரணைக்குச் சென்றவர் வெட்டிக்கொலை!
அதிரடி... விதிகளை மீறியதாக 350 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!
அதிகாலையில் பெரும் சோகம்... ஏரி உடைந்து ஊருக்குள் பாய்ந்த தண்ணீர்... அலறியடித்து ஓடிய மக்கள்!
2023-ம் ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது... இவைதான்!