குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடிவில் 1008 சங்காபிஷேகம்!

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் இன்று நடைபெற்றது.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் குகநாதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி இன்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. காலையில் தீபாராதனை, அதனைத் தொடர்ந்து சங்கு பூஜை நடைபெற்றது. இதில் சிவலிங்கம் வடிவில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குகநாதீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம், மதியம் அலங்கார தீபாராதனை மாலையில் வாகன பவனி நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜபெருமாள், சிவகாமி அம்பாள் எழுந்தருளி கோயிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE