கார்த்திகை மாத அமாவாசை... சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

By காமதேனு

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 10ம்தேதி முதல் 13ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைக்கான வாய்ப்புகள் உள்ளதால் பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில்

கோயிலுக்கு நடந்து செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதியில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தாலோ, ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களின் பாதுகாப்பை கருதி, மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


பாபர் மசூதி இடிப்பு தினம்; டிசம்பர் 6... கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு!

எல்லை தாண்டிய காதல்; பாகிஸ்தான் காதலியின் கரம் பிடித்து அழைத்து வந்த இந்திய காதலன்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ரூ.5060 கோடி உடனே தேவை! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

3 மணி நேரம் வெளுத்து வாங்கப்போகிறது மழை! சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE