நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

By சிவசங்கரி

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையப்பா்-காந்திமதியம்மன்

நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான திருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவையாட்டி நான்காம் திருநாளான வரும் 18-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் திருவீதியுலா நடைபெறுகிறது.

நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோவில்

தொடர்ந்து முக்கிய நிகழ்வான வரும் 24-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் விழா நடைபெற உள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவில் இரண்டாம் நாளில் இருந்து ஒன்பதாம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணியளவில் திருக்கோயிலில் உற்சவா்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நெல்லையப்பரையும், காந்திமதியம்மனையும் வழிபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE