அயோத்தி ராமர் கோயில்... தரிசனத்தை எளிமையாக்க புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தது!

By S. மைதிலி

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனத்தை எளிமையாக்க புதிய வழிகாட்டி நெறிமுறைகளை கோயில் அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நாள் முதலே ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் ராமரை தரிசிக்க வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமால் கோயில் நிர்வாகம் திணறி வருகிறது.

இதையடுத்து ஆண்டுக்கு 3 கோடிக்கு மேல் பக்தர்களை கையாளும் திருப்பதி தேவஸ்தான பாணியை பின்பற்ற அயோத்தி தேவஸ்தானம் முடிவு செய்தது. இது தொடர்பாக அயோத்தி ராமர் கோயில் நிர்வாக குழு திருப்பதி சென்று, அங்கு பக்தர்களை கையாள்வதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பியது.

இதனையடுத்து, அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை கோயில் அறக்கட்டளை தனது எக்ஸ் வலைதளத்தில் இன்று முறைப்படி வெளியிட்டுள்ளது.

அதில், ’ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலுக்கு தினமும் சராசரியாக 1 முதல் 1.5 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் ராமரை தரிசிக்க உள்ளே நுழைவது முதல் வெளியேறுவது வரையிலான முழு செயல்முறையும் தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

காலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை ராமரை தரிசனம் செய்யலாம். ஒருவர் சராசரியாக 60 முதல் 75 நிமிடங்களுக்குள் தரிசனத்தை முடித்துத் திரும்ப கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் வசதிக்காகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் மொபைல் போன்கள், பாதணிகள், பர்ஸ்கள் போன்றவற்றை கோயில் வளாகத்திற்கு வெளியே வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுளன. அதேபோல், பூக்கள், மாலைகள், பிரசாதம் போன்றவற்றை கொண்டு வர வேண்டாம்.

காலை 4 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கும் ராமரின் தரிசனம், 6:15 மணிக்கு சிருங்கர் ஆரத்தி போன்றவையும் நடத்தப்பட்டு இரவு 10 மணிக்கு ஷயன் ஆரத்தியோடு நடை சாத்தப்படுகிறது. இந்த மூன்று ஆர்த்திகள் நுழைவுச்சீட்டுடன் மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற ஆர்த்திகளுக்கு நுழைவு சீட்டுகள் தேவையில்லை.

அயோத்தி ராமர்

இதற்கான நுழைவுச்சீட்டுகள் கோயில் அறக்கட்டளை இணையதளத்தில் பக்தர்களின் பெயர், வயது, ஆதார் நகல், மொபைல் எண் மற்றும் நகரம் போன்ற தகவல்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை. அதேபோல், கோயிலில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தியோ அல்லது ஏதேனும் பாஸ் மூலமாகவோ சிறப்பு தரிசனம் செய்ய எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

தரிசனத்திற்கு பணம் வசூலிப்பது போன்ற மோசடிகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகளும் கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!

சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!

விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE