தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் சிறு பிரேக் எடுத்த பிரதமர் மோடி!

By காமதேனு

தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி, திருப்பதி வெங்கடாஜலபதியை இன்று காலை தரிசனம் செய்து வழிபட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

தெலங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதால் அனைத்து கட்சி தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிஆர்எஸ் சார்பில் முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் சார்பில் ராகுல், பிரியங்கா காந்தி, பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய தலைவர்கள் மக்களைச் சந்தித்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடி திருமலையில் வழிபாடு

தெலங்கானாவில் கடந்த 25-ம் தேதி முதல் 3 நாள் சுற்றுப் பயணமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்திலிருந்து சற்று இடைவெளி எடுத்துக் கொண்டு ஆந்திரா மாநிலம் திருப்பதி - திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு இன்று காலை வந்தார்.

வெங்கடாஜலபதியைத் தரிசத்த அவர் கோயில் வளாகத்தில் வலம் வரும் புகைப்படம், வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பிரதமர் வருகையையொட்டி திருப்பதி, திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...


கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயம்!

'நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை'? திமுக அமைச்சர்களுக்கு ஆளுநர் கேள்வி!

பதற வைத்த பை... கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு!

சோகம்... குஜராத்தில் மின்னல் தாக்கி 20 பேர் பலி!

வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE