திருப்பதியில் பரபரப்பு... நாளை காலை சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி!

By காமதேனு

பிரதமர் மோடி நாளை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். இதற்காக, அவர் இன்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் உள்ளிட்டோர் அவரை வரவேற்கின்றனர்.

தெலங்கானா பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை விமானம் மூலம் திருப்பதி வருகிறார். அவர் நாளை காலையில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

தெலங்கானாவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை 7.00 மணிக்கு திருப்பதி வருகிறார். ரேனிகுண்டா விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

திருப்பதி

பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு சென்று அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர், நாளை திங்கட்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

திருப்பதிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு தங்குமிட பாதுகாப்பு, தீ பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நாளைய தினம் விஜபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சோகம்... மின்கம்பியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு!

காதலனின் கண்முன்னே சீரழிக்கப்பட்ட காதலி... இளைஞர்கள் அட்டூழியம்!

தப்பு பண்றீங்க ப்ரோ... ஞானவேல்ராஜாவை எச்சரித்த சமுத்திரக்கனி!

நடிகை வனிதா மீது தாக்குதல்... முகத்தில் காயங்களுடன் பரபரப்பு குற்றச்சாட்டு!

வெறிநாய் கடித்து ரத்தகாயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE