போடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு திருமலைராய பெருமாள் கோயிலில் தேரோட்டம்

By KU BUREAU

போடி: கோம்பை திருமலைராயப் பெரு மாள் கோயிலில் 21 ஆண்டு களுக்குப் பிறகு நேற்று தேரோட் டம் நடைபெற்றது. போடி அருகே கோம்பை மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது திருமலை ராயப்பெருமாள் கோயில்.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டத்தின்போது கலவரம் நிகழ்ந்தது. இதையடுத்து தேரோட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில், தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதால் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கிழக்கு, தெற்கு, மேற்கு ரத வீதி வழியாக தேர் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்டத்தில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE