பழநி கோயிலில் காகித கவருக்கு பதிலாக பாலித்தீன் கவரில் பிரசாதம் விற்பனை - வலுக்கும் எதிர்ப்பு

By KU BUREAU

பழநி: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில் பழநி முருகன் கோயிலில் காகித கவருக்கு பதிலாக பாலித்தீன் கவரில் பிரசாத விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, தினை மாவு உள்ளிட்ட பிரசாதங்கள் வெள்ளை காகித கவரில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் உள்ள எண்ணெயை உறிஞ்சு வதோடு, கவரின் உள்ளே காற்று போகும்படி இருந்ததால் பிரசாதம் காய்ந்து போய் சுவை மாறும் நிலை ஏற்பட்டது.

இதை தவிர்க்க, பிரசாதங்களை பாலித்தீன் கவரில் போட்டு விற்பனை செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது லட்டு, அதிரசம், முறுக்கு, தினைமாவு உள்ளிட்ட பிரசாதங்களை முருகன் படத்துடன், அருள்மிகு தண்டா யுதபாணி சுவாமி திருக்கோயில் பிரசாதம் என அச்சிடப்பட்ட பாலித்தீன் கவரில் போட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கவரில் பிரசாத தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. எளிதில் மட்கும் வகையிலான ‘பயோ கேரிபேக்’கில் பிரசாதம் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொருட் களை பேக்கிங் செய்வதற்கு மட்டும் 51 மைக்ரான் அளவுக்கு மேலுள்ள பாலித்தீன் பைகளை பயன்படுத்த அனுமதி உள்ளது. இந்த பாலித்தீன் பைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE