அடுத்த ஆண்டு உகாதிக்குள் நாட்டில் 3 பெரிய தலைவர்களுக்கு ஆபத்து இருப்பதாக கர்நாடகாவை சேர்ந்த மடாதிபதி கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே ஹாரனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள கோடிமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா சுவாமிகள் உள்ளார். இவர் அரசியல் மாற்றம், கட்சி தலைவர்களின் எதிர்காலம், மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து கணித்து சொல்வது வழக்கம்.
இவர் அப்படி கணித்து கூறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போதும் மிகப்பெரிய சர்ச்சை விஷயத்தை மடாதிபதி கூறியுள்ளார். அதாவது, நாட்டு மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெரிய நகரங்கள் பிரச்சினைகளை சந்திக்கும் என்றும், உயரமான கட்டடங்கள் இடிந்து விழும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிலும் ,குறிப்பாக அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் பேராபத்து ஏற்படலாம் என்று அவர் கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மக்கள் ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து ஆன்மிக சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று கர்நாடகா மடாதிபதி ஸ்ரீசிவானந்த் சிவயோகி ராஜேந்திரா சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், உச்சபட்சமாக அரசியல் தலைவர்கள் குறித்து இவர் கணித்துள்ளார்.
2024 உகாதி பண்டிகைக்கு முன்பு நாட்டில் பெரிய பெரிய தலைவர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம் என்றும், அதிலும் குறிப்பாக 3 பெரிய மனிதர்கள் ஆபத்தில் உள்ளனர் எனவும் தெரிவித்து பீதியை கிளப்பியுள்ளார்.