ஆடி அமாவாசை : மறக்காம பசுவுக்கு அகத்திக்கீரை கொடுங்க! என்னவெல்லாம் பலன் கிடைக்கும்?!

By காமதேனு

இன்று ஆடி அமாவாசை தினத்தில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினால் நம் பாவமெல்லாம் தீரும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.

அமாவாசை என்பது வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான நாளாகப் போற்றப்படுகிறது. இந்த பூரணமான நாளில், முன்னோர்களை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிற சாஸ்திரம், தெய்வ வழிபாட்டையும் மறக்காமல் செய்யச் சொல்கிறது. முக்கியமாக, பிற உயிர்களுக்கு உதவச் சொல்லி வலியுறுத்துகிறது தர்மசாஸ்திரம்.

பசு

’எல்லாப் பசுக்களையும் காமதேனுவாகவே பார்க்கிறேன். உன்னை வணங்குவதால், காமதேனு பசுவானவள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சகல நன்மைகளையும் தந்தருளும்படி சொல்வாயாக’ என்கிறது மந்திரம்.

பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ரொம்பவே விசேஷமானது. எந்தநாளில் வேண்டுமானாலும் அகத்திக்கீரை வழங்கி வழிபடலாம். குறிப்பாக, அமாவாசை நாளில், பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவது, முன்னோர் சாபத்தை நீக்கும் என்றும் முன்னோர் ஆசி கிடைக்கப் பெறலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், முன் ஜென்மத்து வினைகள் அனைத்தும் நம்மை விட்டு விலகி விடும். பசுவை வணங்குவதும், பசுவுக்கு அகத்திக்கீரை அளிப்பதும் மகா புண்ணியம். பசுவுக்கு அகத்திக்கீரையை வழங்கும் போது, நாம் மனதார என்ன நினைத்துப் பிரார்த்தனை செய்கிறோமோ அவை அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பசுவுக்கு அடிக்கடி அகத்திக்கீரை வழங்குங்கள். அமாவாசை நாளிலேனும் வழங்குங்கள். நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE