கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் - 3 மாதங்களில் ரூ.20 லட்சம் உண்டியல் காணிக்கை

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு பிறகு இன்று திறந்து எண்ணப்பட்டது. குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மற்றும் கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெற்றது.

பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், ஆதி பராசக்தி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 20 லட்சத்து ஆயிரத்து 307 ரூபாய் காணிக்கை பணம் இருந்தது. மேலும், பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய 5.420 கிராம் தங்கம், 323 கிராம் வெள்ளியும் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE