சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆவணி திருவிழா துவக்கம்

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத் திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா இன்று காலை துவங்கியது.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதி அருகிலுள்ள திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் ஆவணி திருவிழா திருக்கொடியேற்றம் நடைப்பெற்றது. இதில் மேலும் மேயர் மகேஷ், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

10 நாள் திருவிழாவில் தினமும் வாகன பவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. 9-ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு சுசீந்திரம் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE