ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்து உள்ள நிலையில், திருச்சி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
வைணவவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகளவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவிலான ஸ்ரீரங்கம், நவகிரகங்களில் சுக்கிரன் பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலின் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் மற்றும் இரண்டாவது நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் காணப்பட்டது. இதனால் அபாயகரமான நிலையில் உள்ள கோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே செல்லும் நிலை இருந்து வந்தது.
அதனை சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த வண்ணம் இருந்தனர். ஆனாலும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் விரிசல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.50 மணிக்கு அந்த பகுதி சுவர் இடிந்து விழுந்துது. கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் கோயில் கோபுர சுவர்கள் இடிந்து விழுந்ததால் ரங்கநாதரின் பக்தர்கள் மனமுடைந்து போயுள்ளளனர்.