ஆடி அமாவாசை... பக்தர்களுக்கு மலையேற 6 நாட்கள் அனுமதி!

By காமதேனு

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்ய 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி செல்லலாம் என மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ளது சதுரகிரி மலை. இந்த மலையில் சுந்தர மகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என பக்தர்கள், மலைமீதேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதே சமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE