பக்தர்கள் கவனத்துக்கு... நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் - அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

By காமதேனு

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு வந்து ஆசி பெறுவது வழக்கம். இதனால் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பல ஆயிரம் பேர் சபரிமலைக்கு செல்வார்கள். இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள்

இந்த பேருந்துகள், நாளை முதல் ( 16-ந் தேதி முதல்) அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளதாகவும், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி/ கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

கார்த்திகை மாதம் திறக்கப்படும் அய்யப்பன் கோவில், டிசம்பர் மாதம் 27ந்தேதி (27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5 மணி வரை) கோயில் நடை சாத்தப்பட உள்ளதால், டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகளைwww.tnstc.in மற்றும் TNSTC Official App மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகள்

மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறுவதற்கு 94450 14452,94450 14424, 94450 14463 மற்றும் 94450 14416 ஆகிய செல்போன் எண்களும் உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் வசதிகள் மட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக வாடகை அடிப்படையிலும் பேருந்துகள் விடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோயில்களுக்கு செல்லும் நிலையில், மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜையை காண வழக்கத்தை விட பன்மடங்கு செல்வார்கள். இதை கருத்தில் கொண்டு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE