கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!

By காமதேனு

சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்கா சந்தனக்கூடு விழாவில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.

சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி என்ற தர்கா உள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் மத வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களும் வந்து வழிபடுவது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தர்காவில் இன்று நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் பங்கேற்பதாக பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் காரில் வந்திருந்தார். இதன் பின் சிறப்பு பிரார்த்தனையில் அவர் ஈடுபட்டார்.

அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதன் பின் தன் காருக்குச் செல்வதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் செல்லவும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தனது காரில் செல்லாமல், அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி ஏ.ஆர்.ரஹ்மான் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE