சித்திரை ஆட்டத் திருவிழா; இன்று சபரிமலை கோயில் நடை திறப்பு!

By காமதேனு

சபரிமலையில், சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு மாத பிறப்பு நாளிலும், சபரிமலை சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 426 பவுன் தங்க அங்கி, மறைந்த திருவிதாங்கூா் மன்னா் காணிக்கையாக வழங்கியது. ஒவ்வொரு வருடமும் திருவிதாங்கூர் மன்னர் பிறந்தநாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, அந்த தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. இந்த விழாவே சித்திரை ஆட்டத் திருவிழா.

சபரிமலை ஐயப்பன் கோயில்

இந்நிலையில், இந்த வருட சித்திரை ஆட்டத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. நாளை நவம்பர் 11ம் தேதி சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். அதன் பிறகு இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE