புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம் - விண்ணப்பிப்பது எப்படி?

By KU BUREAU

சென்னை: புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணத்துக்கு மூத்த குடிமக்களை 4 கட்டங்களாக அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறைசார்பில் ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அந்தவகையில், இந்த ஆண்டுசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்,மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக் குடி, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந் துள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் 4 கட்டங்களாக ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

அதன்படி, 21-09-2024, 28-09-2024, 5-10-2024, 12-10-2024 ஆகிய நாட்களில் அந்தந்தமண்டலங்களில் ஆன்மிக பயணம்அழைத்து செல்லப்பட உள்ளனர். சென்னை மண்டலத்தில், திருவல் லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், மகாபலிபுரம் ஸ்தல சயன பெரு மாள் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில்க ளுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம்அழைத்து செல்லப்பட இருக்கின் றனர்.

காஞ்சிபுரம் மண்டலத்தில், காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், விளக்கொளி பெருமாள் கோயில், பாண்டவதூத பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோயிலுக்கும் அழைத்து செல்லப்பட இருக் கின்றனர்.

விழுப்புரம் பகுதியில் விழுப்புரம் ஆஞ்சநேயர் சுவாமி கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், கோலியனூர் வரதராஜ பெருமாள் கோயில், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கும் அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

எனவே, 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் இந்து சமய அறநிலையத் துறையின் ‘www.hrce.tn.gov.in’ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்பு அவற்றை, சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்.19-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 18004251757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE