திருப்பதியில் காலை 11 மணி வரையில் தரிசனம் கிடையாது

By காமதேனு

திருமலையில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) காலை 11 மணி வரையில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கான தங்குமிடம், உணவு உட்பட அனைத்து வசதிகளும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செய்து தரப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிவரை பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலையில் எதிர்வரும் ஜூலை 17-ம் தேதி ஆனி வார ஆஸ்தானம் என்கிற ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் உற்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்துக்கு முன்பு ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் கோயில் சுத்தப்படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் காலை 6 மணி முதல் 11மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, இன்று காலை விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசனம் தொடா்பான பரிந்துரை கடிதங்கள் எதுவும் இன்று ஏற்கப்படமாட்டாது என்று தேவஸ்தானம் உறுதிபட தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE