அயோத்தி ராமர் கோயிலில் தினந்தோறும் பிற்பகல் 1 மணி நேரம் நடை அடைக்கப்படும் என்று தலைமை அசர்க்கர் ஆர்ச்சார்யா சந்யேந்திர தாஸ் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் கடந்த மாதம் 22-ம் தேதி திறக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அத்துடன் இவ்விழாவில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையல், ராமர் கோயில் தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும் என்றும், அதன்படி தரிசன நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது: பிராண பிரதிஷ்டையைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தரிசன நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரை அறக்கட்டளை அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 23-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு, 6 மணிக்கு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீராம் லல்லா ஐந்து வயது குழந்தை. அதிகாலையில் விழிக்கும் அவர் பக்தர்களை இடைவெளியின்றி சந்திப்பதால் சிறிது ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை தெய்வம் ஓய்வெடுக்கும் வகையில் கோயில் கதவுகள் சாத்தப்படும். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!
அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!
அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - எஸ்.பி.வேலுமணி உறுதி!