ஆனி மாத பவுர்ணமி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு வீதியுலா உற்சவம்

By காமதேனு

108 திவ்யதேசங்களில் ஒன்றான, உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆனி மாதம் பவுர்ணமியை யொட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

திருவடிகோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலைமீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அரக்கு கரை வெண்பட்டு உடுத்தி, வைர, வைடூரிய தங்க, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க,வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் திருக்கோவிலுக்கு திரும்பினார்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

திருவடி கோவில் புறப்பாடு உற்சவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE