2,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம்: ரூ.40 கோடி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

By காமதேனு

இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒரு கால பூஜை திட்டத்திற்காக ரூ.40 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஒரு கால பூஜை கூட நடத்த நிதி வசதி இல்லாத, 15 கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒருகால பூஜை திட்டத்தை செயல்படுத்த தலா ரூ.2 லட்சம் வைப்பு நிதியாக முதலீடு செய்து, அந்த வட்டிப்பணத்தில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

திருக்கோயில்களில் ஒருகால பூஜை திட்டம்

இந்நிலையில் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 40 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்

இதற்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE