நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

By இரா.ஜெகநாதன்

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 14-ம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளிரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் திருவீதி உலா நடைபெற்றது. மே 20-ம் தேதி தங்க ரதம் உலா நடைபெற்றது. நேற்று காலை காளியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு வெள்ளிரதம் பவனியும், தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றன. இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இரவு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE