திருவண்ணாமலை கோயில் தரிசன நேரத்தில் மாற்றம்... முக்கிய அறிவிப்பு!

By காமதேனு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 28ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது.

இந்நிலையில் பௌர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் காரணமாக அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

மேலும் தரிசன நேரம் மற்றும் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 28 மற்றும் 29ம் தேதிகளில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசன மற்றும் பொது தரிசனம் மட்டும் வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

மேலும் 3ம் பிரகாரத்தில் தரிசன வரிசை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும் வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை மறுதினம் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு பிறகு வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE