திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு 10 லட்சம் ருத்ராட்சங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
ஈக்காட்டில் அமைந்துள்ள இந்த திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோவிலில் சிவராத்திரி அன்று முழு பக்தியுடன் வழிபட்டால் ஶ்ரீபஞ்சவர்ண ஸ்வாமி ஐந்து நிறங்களும் மாறுவதை பக்தர்கள் கண்கூடாக கண்டு செல்வதாக கூறப்படுகிறது.
மேலும் திருமண பாக்கியம், நோய் தீர்க்கும் வல்லமை படைத்த ஶ்ரீ பஞ்சவர்ண சுவாமி, விசக் கடிகளுக்கு விபூதி மூலம் வியாதியை சரி செய்யும் தன்மை கொண்டதாகவும் போற்றப்படுகிறது. இத்தகைய வரலாறு கொண்ட ஶ்ரீ பஞ்சவர்ண சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு விபூதி அபிஷேகமும் பன்னீர் அபிஷேகமும் நடைபெற்றது. இதனை திருவள்ளூர், ஈக்காடு, புள்ளரம்பாக்கம், ஒதிக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமியை வழிபட்டு ஓம் சிவாய நாமம் எழுதி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதையும் வாசிக்கலாமே...
'வானத்தில் ஆச்சரியம்'... தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்த புகைப்படம் வைரல்!
நடிகர் விஜய் கட்சியின் பெயர் 'தமுகவா'?...வெளியான பரபரப்பு தகவல்!
மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீச்சு... பருவநிலை ஆர்வலர்களால் பரபரப்பு!
பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!