தேனி: ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று தேனி மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடந்த ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் தொடங்கியது. இம்மாதம் அம்மனுக்கு உகந்தது என்பதால் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு தேனி மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கூழ், பால், புளியோதரை, சுண்டல் உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சிஅம்மன், சின்னமனூர் சிவகாமி அம்மன், ஆண்டிபட்டி காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று வரலட்சுமி விரத பூஜை என்பதால் மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடைபெற்றது.
» காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் விண்ணேற்பு பெருவிழா!
» திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு