உலக அமைதிக்காக பிரார்த்தனை... அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு!

By காமதேனு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு, அக்டோபர் 27்-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் உருக்குலைந்து கிடக்கும் வீடுகள்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இவ்வாறு இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே 13 நாட்களாக தொடர்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உடனடியே போரை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ’’வரும் 27-ம் தேதியன்று, உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் மற்றும் நோன்பு கடைபிடிக்க வேண்டும்

உலக அமைதியை விரும்பும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கலாம். எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது என்று குறிப்பிட்டுள்ள அவர், காஸாவில் மனிதாபிமான பேரழிவை தவிர்க்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE