ஐப்பசி முதல் நாளை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
ஐப்பசி மாதத்தில் சூரியன், துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவர். துலா ஸ்நானம் செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்புமிக்க ஐப்பசி முதல் நாளான நேற்று, தமிழக முதல்வர் முஸ்டாலின் மனைவி துர்கா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.