அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் ஒரு வார கால பூஜையில் 5-ம் நாளான இன்று சரயு நதி புனித நீரால் பகவான் ராமர் சிலை அபிஷேகம் செய்யப்பட உள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் பகவான் ராமர் பிரான பிரதிஷ்டை விழாவுக்கு முன்னதாக பின்பற்றப்படக்கூடிய 7 நாள் வேத சடங்குகளின் ஐந்தாவது நாள் இன்றாகும்.
இன்று, கோயில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள பகவான் ராமர் சிலைக்கு சரயு நதியின் புனித நீரில் அபிஷேகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து 'வாஸ்து சாந்தி' மற்றும் 'அன்னாதிவாஸ்' சடங்குகள் நடைபெறும்.
வேத சடங்குகளின்படி, வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சபூதத்திலிருந்து அமைதியைப் பெற 'வாஸ்து சாந்தி' செய்யப்படுகிறது. வாஸ்து பூஜை நடத்திய பிறகும்கூட புதிய ஆலயத்தில் எஞ்சியிருக்கும் அனைத்துக் குறைபாடுகளையும் அகற்ற, வாஸ்து சாந்தி செய்யப்படுகிறது.
கோயிலின் கருவறைக்குள் இறைவன் ராமரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் பகவான் ராமரின் கண்கள் மஞ்சள் துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. இது பிரான பிரதிஷ்டை நாளன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் கோவிந்த் தேவ் கிரி கூறுகையில், " 'நெட்ரோன்மெலான்' சடங்கு முறைப்படி, ஒரு தங்கக் கம்பியில் தேன் பூசுவதன் மூலம், சுவாமியின் கண்கள் அபிஷேகம் செய்யப்படுகின்றன. இது பக்தர்கள் காணும்போது 'காஜல்' போன்று தெரியும்” என்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஒரு வார கால சடங்குகள் வரும் திங்கள்கிழமை பிரான பிரதிஷ்டை விழாவுடன் முடிவடையும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரான பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. ஜனவரி 23-ம் தேதி முதல் ராமர் கோயிலில் பொது மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
உதயநிதி குறித்த இரட்டை அர்த்த பேட்டி: மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை திட்டவட்டம்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து வைரமுத்து குரலில் 'டீப் ஃபேக்' வீடியோ: பொறியாளர் கைது!
நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்...பதறவைக்கும் வீடியோ!
பாஜகவில் சேர பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியை உதறியவருக்கு அதிர்ச்சி!
திருவிழா கோலம் பூண்டது சேலம்... திமுக இளைஞரணி மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் இன்றே தொடங்குகிறது!