அயோத்திக்கு வர வேண்டாம்... மத்திய அமைச்சர்களுக்கு பாஜக தலைமை திடீர் உத்தரவு!

By காமதேனு

மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் அனைவரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் அயோத்திக்கு வர வேண்டாம் என்று பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம், நாளை மறுதினம் (ஜனவரி 22) நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, அன்றைய தினம் பக்தர்களுக்கு கோயிலுக்கு வர அனுமதி தரப்படவில்லை. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் இயக்கமாக மாற்ற, அன்றைய நாளில் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் விளக்கேற்றி வழிபடுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து பகுதிகளிலும் ராமர் கோயில் அல்லது ஏதாவது ஒரு கோயிலில் பெரிய 'டிஜிட்டல்' திரையில் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் கும்பாபிஷேக நிகழ்வு பெரிய திரையில் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது.

தூர்தர்ஷன் தொலைக்காட்சி உட்பட பல்வேறு தொலைக்காட்சிகள் இந்த கும்பாபிஷேக விழாவை நேரலை செய்கின்றன. அன்றைய நாளில் சிறப்பு வழிபாடு, ராம பஜனை, அன்னதானம், பொது வெளியில் தீபம் ஏற்றுதல் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நிலையில் இந்த கும்பாபிஷேகத்தைக் காண அனைவரும் ஆர்வமாக இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்களுக்கு அயோத்திக்கு நேரில் வர கட்சித்தலைமை திடீரென தடை விதித்துள்ளது.

அயோத்தி ராமர்

மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் அயோத்திக்கு நேரில் வராமல், அவரவர் மாநிலங்களில் ஏதாவது ஒரு கோயிலில், மக்களுடன் இணைந்து, டிஜிட்டல் திரையில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவைக் காண வேண்டும். மேலும், சிறப்பு வழிபாடு, பஜனையில் பங்கேற்க வேண்டும் என, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது.

அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரத்தில் மக்களுடன் இணைந்து, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை திரையில் காண இருப்பதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், தமிழகத்தில் ஏதாவது ஒரு கோயிலில் மக்களுடன் அமர்ந்து, கும்பாபிஷேகத்தை காண இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

உதயநிதி குறித்த இரட்டை அர்த்த பேட்டி: மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து வைரமுத்து குரலில் 'டீப் ஃபேக்' வீடியோ: பொறியாளர் கைது!

நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்...பதறவைக்கும் வீடியோ!

பாஜகவில் சேர பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியை உதறியவருக்கு அதிர்ச்சி!

திருவிழா கோலம் பூண்டது சேலம்... திமுக இளைஞரணி மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் இன்றே தொடங்குகிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE