அயோத்தியில் ரயில்கள் நிற்காது... பேருந்துகள் நிறுத்தவும் அனுமதி இல்லை!

By காமதேனு

அயோத்தி ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அன்றைய தினம் அங்கே கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் மற்றும்.ராமர் சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தொடங்கி பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், அன்றைய தினம் நாடு முழுக்க பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் அயோத்தியில் ரயில்கள், பேருந்துகள் நிற்காது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளன. அங்கே ஒவ்வொரு 100 மீட்டருக்கும் போலீஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோயில்

அங்கே செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. தற்போது அயோத்தியில் சுமார் 13,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் அயோத்தி பஸ் டிப்போவில் பேருந்துகள் நிற்க அனுமதிக்கப்படாது. அன்றைய தினம் அயோத்தி தாம் சந்திப்பில் எந்தவொரு ரயில்களும் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக நாளில் அயோத்திக்கு ஏராளமான பக்தர்கள் வரக்கூடும். அவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடியும், “அயோத்திக்கு பொதுமக்கள் அன்றைய தினத்தில் வருவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். தற்பொழுது அங்கு ரயில், பஸ்கள் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்குச் செல்வதை முடிந்தவரை வெளியூர்வாசிகள் தவிர்ப்பது நல்லது.

இதையும் வாசிக்கலாமே...


மசூதியை இடித்து கோயில் கட்டியதில் உடன்பாடில்லை... அடுத்த சர்ச்சை கிளப்பிய உதயநிதி!

காணும் பொங்கல்... கட்சியினருக்கு ஃபுல் பாட்டில் பிராந்தியுடன் உயிருடன் கோழியைப் பரிசளித்த எம்எல்ஏ!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி; திமுக அமைச்சரின் சதி... 2ம் இடம்பிடித்த மாடுபிடி வீரர் வழக்கு தொடர போவதாக பேட்டி!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோவில் கைது

தோனியின் தீவிர ரசிகர் மர்ம மரணம்; அதிர்ச்சியில் உறைந்த கடலூர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE