டெல்லி கோயிலில் ராமாயண பாராயணம் செய்த கேஜ்ரிவால் - ஆம் ஆத்மியின் அசத்தல் திட்டம்!

By காமதேனு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பாஜக மும்மரமாக சுழன்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஒரு வித்தியாசமான திட்டத்தை கையிலெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பாலாஜி கோயிலில் நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயண நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார்.

ராமர் கோயில் விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சுந்தரகாண்ட பாராயணத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள ஸ்ரீ பாலாஜி கோயிலில் நடைபெற்ற ராமாயணத்தின் ஒரு பகுதியான சுந்தரகாண்ட பாராயணத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவுடன் பங்கேற்றார். இந்த பாராயண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு இசைக் கருவிகள் இசைக்க சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்றது. அப்போது, அரவிந்த் கேஜ்ரிவாலும் பக்தர்களோடு இணைந்து சுந்தரகாண்ட பாடல்களைப் பாடினார்.

முன்னதாக, நேற்று அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "அனைவரின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பல இடங்களில் சுந்தரகாண்ட பாராயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. நான், என் மனைவியுடன் ரோகிணி கோயிலில் நடைபெற உள்ள சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்க இருக்கிறேன். உங்கள் வசதிக்கேற்ப உங்கள் வீட்டிற்கு அருகில் நடைபெறும் சுந்தரகாண்ட பாராயணத்துக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்" என்று அழைப்பு விடுத்திருந்தார்.

ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், "அனுமனின் ஆசியோடு டெல்லியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சுந்தரகாண்ட பாராயணத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த முக்கிய பணிக்கு பகவான் ஆஞ்சநேயர் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இனி ஒவ்வொரு மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

வரும் காலங்களில் 2,600 இடங்களில் சுந்தரகாண்டமும், அனுமன் சாலிசாவும் பாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ராமரின் பெயரைப் பயன்படுத்துவதையும், அனுமன் மீது பக்தி செலுத்துவதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. அயோத்தி ராமர் கோயில் குறித்து நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது எங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி மற்றும் பெருமைக்குரிய ஒன்று" என்று தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு செக் வைக்கும் விதமாகவே இந்த சுந்தரகாண்ட பாராயண நிகழ்ச்சியை ஆம் ஆத்மி ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

திடீர் திருப்பம்... அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: டிரம்பை ஆதரிக்க முடிவு!

மாதம் ரூ.71,900 சம்பளம்... சென்னை உயர் நீதிமன்றத்தில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி... டாஸ்மாக் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், மதுபாட்டில்கள் கொள்ளை!

பல நூற்றாண்டுகளாக மண்ணில் புதைந்த ராமர் கோயில் அகழாய்வில் கண்டுபிடிப்பு! பக்தர்கள் பரவசம்!

அதிர்ச்சி...ஓடுபாதையில் உணவருந்திய பயணிகள்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE