பிரம்மோற்சவ விழா: திருப்பதிக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By காமதேனு

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வாடிக்கையான ஒன்று. தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு இதற்காக சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 பிரமோற்சவம் நடைபெறுவதால், பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, கும்பகோணம், காரைக்குடி மற்றும் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கு www.tnstc.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE