குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.
காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஸ்ரீநகர் வந்தார். காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஜம்முவில் ரியாசி மாவட்டம் காத்ரா நகரில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு முர்மு இன்று சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு குடியரசு தலைவர் முர்மு, வைஷ்ணவி தேவியை வழிபாடு நடத்தி சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், கோயிலில் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வதி பவன் என்ற மிகப் பெரிய அறையையும் குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார். 2 நாள் காஷ்மீர் பயணத்தை முடித்துக் கொண்டு முர்மு நேற்று மாலை டெல்லி திரும்பினார்.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது