திருமலை: திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதித்து தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே திருப்பதி மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் வனவிலங்குகளின் இனப் பெருக்க காலம் என்பதால், இரவு நேரங்களில் மலைப்பாதையில் விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கக் கூடும். அதனால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதங்களில் வனவிலங்குகள் குட்டிகளை ஈன்று ஆவற்றிற்கு பாலூட்டும் காலம் ஆகும். எனவே இரவு நேரத்தில் வனவிலங்குகள் தனது குட்டிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். குட்டிகளுடன் செல்லும் வனவிலங்குகளை நெருங்கினால், அவர்கள் மீது வனவிலங்குகள் கொடூர தாக்குதலை மேற்கொள்ளும்.
எனவே இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க இன்று முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை காலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் இரு சக்கர வாகனங்களில் திருப்பதி மலைப்பாதைகளில் பயணிக்கலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
» அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» உதகையில் 182 மாணவிகளுக்கு ரூ.8.66 லட்சம் செலவில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள் வழங்கினர்