புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள அய்யனார் கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டை- ராஜேந்திரபுரம் கிராமத்தில் ஸ்ரீபூரண புஸ்கலாம்பிகை உடனுறை மெய்ய நாதசுவாமி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு விழா நடந்தது. இதையடுத்து கிராமமக்கள் ஒன்று திரண்டு குதிரை எடுப்பு விழா நடந்தது.
இதையடுத்து கிராமமக்கள் ஒன்று திரண்டு குதிரை உள்ளிட்ட மண்ணால் ஆன 12 சிலைகளை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.