பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாத பிரம்மோற்சவம், நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாத பிரம்மோற்சவம்!

By மு.இசக்கியப்பன்

சென்னையில் புகழ்பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம் மே 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நின்ற திருக்கோலத்தில் வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமத்துடன், தனது தேவியார் ருக்மிணி பிராட்டி, மகன் பிருத்யும்னன், பேரன் அநிருத்தன், தம்பி சாத்யகி ஆகியோருடன் இத்திருக்கோவிலில் சேவை சாதிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் குருசேத்திரப் போரில் தன் முகத்தில் ஏந்திய வடுக்களுடன் இங்கு அருள்பாலிக்கிறார்.

இத்திருக்கோவிலில் ஆண்டுமுழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனினும் சித்திரை மாதம் பார்த்தசாரதி பெருமாளுக்கான பிரம்மோற்சவமும், இதே கோவிலில் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும் புகழ்பெற்றவை.

சித்திரை பிரம்மோற்சவம் மே 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 6-ம் தேதி கருடசேவை நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரை வரை கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தார். 8-ம் தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10-ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் 4 மாட வீதிகளில் வலம் வந்து 9 மணிக்கு நிலையை வந்தடையும்.

8-ம் திருவிழாவான வரும் 11-ம் தேதி வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, 12-ம் தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. 13-ம் தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE