அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு @ திண்டுக்கல்

By பி.டி.ரவிச்சந்திரன்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே ஆடி அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பேரணை வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் கோயில். ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

பரிகார ஸ்தலமாக விளங்கும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

தொடர்ந்து வைகை ஆற்றில் புனித நீராடி கோயில் வளாகத்தில் மோட்ச தீபம் ஏற்றி தங்கள் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE