சபரிமலை மண்டல பூஜை: தரிசனத்துக்கான இணையவழி முன்பதிவு துவக்கம்

By காமதேனு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காகவும், தொடர்ந்து மண்டல பூஜை தரிசனத்திற்காகவும் இணைய வழி முன்பதிவு துவங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரியாக அருள்பாளிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயில் திருநடையானது ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாள்களுக்கும் திறக்கப்படும். இதேபோல் முக்கிய விசேசங்களின் போதும் திறக்கப்படும். இதுபோக கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக திறக்கப்படும்போது விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம்.

அந்தவகையில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17 ம் தேதி திறக்கப்படும் சபரிமலை, தொடர்ந்து தீபாவளிப் பண்டிகையும் வருவதால் 25 ம் தேதிவரை திறந்திருக்கும். தொடர்ந்து மண்டல பூஜைக்காக நவம்பர் 16 ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்படும். 17 ம் தேதியில் இருந்து, டிசம்பர் 27 ம் தேதிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடந்து அன்றைய தினமே நடை அடைக்கப்பட்டு, ஜனவரி மாதம் மீண்டும் திறக்கப்படும்.

இதில் ஐப்பசி மாத மாதாந்திர பூஜை மற்றும் மண்டல பூஜைக்கால தரிசனத்திற்கான இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோக, ஸ்பாட் புக்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இணைய வழி முன்பதிவு தொடங்கினாலும் ஒருநாளைக்கு இத்தனை பக்தர்கள்தான் வரவேண்டும் என்னும் கட்டுப்பாடு எதுவும் இல்லை. இது கேரள அரசு, பக்தர்கள் கூட்டத்தை மதிப்பீடு செய்து அதற்குத் தகுந்தார்போல் முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE