காஞ்சிபுரம் நடுத்தெரு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பஜார்வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு நடுத்தெரு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று காலையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பஜார் வீதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு நடுத்தெரு மாரியம்மன் கோயில். இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு அதன் குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களும் கோயில் வளாகத்தில் பல்வேறு ஹோமங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து இன்று காலை மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகள் முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க வாணவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழுங்க கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த விழாவில் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE