ஆஷாட வெள்ளி சிறப்பு பூஜை: சாமுண்டீஸ்வரி கோயிலில் மைசூர் மன்னர் வழிபாடு

By KU BUREAU

சாமுண்டீஸ்வரி கோயிலில் நடைபெற்ற ஆஷாட வெள்ளி சிறப்பு பூஜையில் மைசூர் மன்னரும், பாஜக எம்.பியுமான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் கலந்து கொண்டார்.

கர்நாடகா மாநிலம், மைசூர் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி இன்று காலை சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மைசூர் மன்னரும், பாஜக எம்.பியுமான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் பங்கேற்றார். அவர் எம்.பியான பிறகு முதல் முறையாக இந்த பூஜையில் பங்கேற்றார். இந்த நிகழ்வையொட்டி சாமுண்டி மலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆனால், சாமுண்டி மலைக்கு பொதுமக்கள் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லலிதா மஹால் ஹெலிபேட் அருகே வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் மைதானத்தில் 2,000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் சுமார் 1,000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பிற பயணிகள் வாகனங்கள் நிறுத்த முடியும். அத்துடன் மலைக்கு வரும் பக்தர்களுக்கு லலித்மஹால் அரண்மனை அருகே உள்ள மைதானத்தில் இருந்து சாமுண்டி மலைக்கு இலவச பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இலவச பேருந்து சேவை செய்யப்பட்டுள்ளது. ஆஷாட மாதத்தின் நான்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டி மலைக்கு பக்தர்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று முதல் ஜூலை 14, 19, 21, 26, 28 மற்றும் ஆகஸ்ட் 2 முதல் 4 வரை தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயிலுக்குள் மக்கள் வரிசையில் நிற்பதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE