சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சப்தாவர்ணம் - திரளான பக்தர்கள் தரிசனம்

By KU BUREAU

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை தெப்பத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சப்தாவர்ணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். ரதவீதிகளில் வலம்வந்த தேர் காலை 10.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. இதைதொடர்ந்து இரவில் சப்தா வர்ணம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் தாணுமாலய சுவாமியும் அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம் பெருமாளும் வீதி உலா ரிஷப வாகனத்தில் தாணுமாலயசுவாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கடம் விண்ணவர பெருமாளும் வீதி உலா வந்து கோயிலை அடைந்தனர்.

கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் முருகப் பெருமான், வேளிமலை குமாரசுவாமி எதிரெதிரே காட்சியளித்தனர். அனைத்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது, அப்போது, தாணுமாலய சுவாமி தனது மக்களை பிரிய மனமில்லாமல் சன்னிதானத்துக்கு முன்னும் பின்னுமாக அசைந்து செல்வதும் பின்னர் திரும்புவது போலும் பலமுறை நடந்தது.

இந்த காட்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் தாணுமாலயசுவாமியும் அறம் வளர்த்த நாயகி அம்மனும் சந்நிதானது்துக்குள் சென்றனர். விழாவின் 10-ம் நாளான நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE