காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா மே 7-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். மே 14-ம் தேதி தேரோட்டம் நடை பெற்றது.
நேற்று முன்தினம் இரவு சர்வ அலங்காரத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, தீபாராதனை நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இரவு தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் அம்மன் எழுந்தருளினார். இரவு 11 மணிக்கு மேல் தெப்பத் திருவிழா நடைபெற்றது.
தெப்பத்தேரில் வலம் வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். நேற்று அதிகாலை புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடை பெற்றது.