கல்லித்திபாறை முனியப்பன் கோயில் திருவிழா - பெண்கள் பால்குட ஊர்வலம்

By KU BUREAU

கிருஷ்ணகிரி: அவதானப்பட்டி அருகே உள்ள கல்லித்திபாறை காட்டு முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று பெண்கள் பால்குடம் எடுத்தபடி ஊர்வலமாகச் சென்று சுவாமியை வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி அருகில் உள்ள அவதானப்பட்டி உத்தேரிக் கொட்டாய் கிராமத்தில் மலைமேல் அமைந்துள்ள கல்லித்திபாறை காட்டு முனியப்பன் கோயில் திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே சீருடையில் உத்தேரிக்கொட்டாயில் இருந்து கல்லித்திபாறை காட்டு முனியப்பன் கோயிலுக்கு, மேள தாளங்கள் முழங்க பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் முனியப்பனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாளை (19-ம் தேதி) மதியம் கிடா வெட்டி விருந்து உபசரிப்பு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவதானப்பட்டி மற்றும் உத்தேரிக்கொட்டாய் கிராம மக்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE